மறுஜென்மம் எடுத்து வந்த குட்டியை கொஞ்சி முத்தமிட்ட தாய் யானை - ``பாசத்துல மனுஷனே தோத்துடுவான் போல’’ #elephantviralvideo #elephantcutevideos மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் டீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு மாத குட்டி யானையை மீனவர்கள் பத்திரமாக மீட்டு தாயுடன் சேர்த்தனர். கஜோல்டோபா பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீனவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக மீனவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு படகுகளில் சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரம் ஆற்றில் பின்தொடர்ந்து சென்று குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானைக்கு வனத்துறையினர் முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் மீனவர்களின் கூட்டு முயற்சியால் குட்டி யானை தாய் யானை இருந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. குட்டியை பார்த்ததும் தாய் யானை அன்புடன் அணைத்து பாலூட்டிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.