சமீபத்திய செய்திகள்

Thiruchendur | திருச்செந்தூர் கடலில் மூழ்கிய மாற்றுத்திறனாளி முதியவர் மீட்பு

திருச்செந்தூர் கடலில் மூழ்கிய மாற்றுத்திறனாளி முதியவர் மீட்பு

thanthitv

#thiruchendur #thanthitv

திருச்செந்தூர் கடலில் மூழ்கிய மாற்றுத்திறனாளி முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராடும் பகுதியில், முதியவர் ஒருவர் கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதை ரோந்து பணியில் இருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கவனித்தனர். உடனடியாக கடலுக்குள் இறங்கி அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய முதியவர், தான் கோவையைச் சேர்ந்த நாகரத்தினம் என்றும், வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளி என்றும் தெரிவித்துள்ளார். உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்