Digital Ration | Karaikal | காரைக்காலில் டிஜிட்டல் ரேஷனில் OTP குளறுபடி - பொதுமக்கள் அவதி #Puducherry #Karaikal #DigitalRationCard #RationShop புதுச்சேரி காரைக்காலில் புதிய டிஜிட்டல் ரேஷன் முறையில் ஏற்பட்டுள்ள OTP குளறுபடியால், தீபாவளி நேரத்தில் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசின் CBDC டிஜிட்டல் டோக்கன் முறையில், பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும் OTP மூலம் மளிகைப் பொருட்கள் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பலருக்கு OTP வரவில்லை என்றும், வந்த OTP-யை தவறுதலாக அழித்துவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த பெண்கள் என பலரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் மீண்டும் OTP அனுப்பி வருகின்றனர். தீபாவளி நேரத்தில் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.