தீயாக பரவிய வீடியோ..தனுஷை வச்சி செய்த நெட்டிசன்கள் - பொறுக்க முடியாமல் Die Hard ஃபேனே போட்ட வீடியோ #dhanushviralvideo #dhanushfanviralvideo நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது பவுன்சர்களால் ரசிகர் தள்ளிவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், அந்த ரசிகர் கௌதம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்... ஹைதராபாத்தில் நடைபெற்ற 'ஓம்' திரைப்பட நிகழ்வில் நடந்த இந்த சம்பவத்தின்போது தனுஷ் மௌனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுத்தொடர்பாக சம்பந்தபட்ட ரசிகர் கௌதம் எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில்,10 ஆண்டுகளாக தனுஷின் தீவிர ரசிகராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கௌதம், தனுஷ் மீது தொடர்ந்து குறை கூற ஏன் முயற்சிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்... மேலும், “என் குடும்பம் யார் என்று என் குடும்பத்திற்குத் தெரியும், என் ரசிகர்கள் யார் என்று என் ரசிகர்களுக்குத் தெரியும், நான் யார் என்று என் கடவுளுக்குத் தெரியும்” என்ற தனுஷின் வரிகளையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்... இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது...