#cmvijay #chennaibus சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், 1,000 புதிய ஏ.சி மின்சாரப் பேருந்துகளை வாங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டில் மொத்த செலவு ஒப்பந்த முறையின் கீழ் இந்தப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் உட்கட்டமைப்பு வசதிகளும் பணிமனைகளில் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 355 பேருந்துகள் AC வசதி கொண்டவை. புதிய பேருந்துகள் மூலம் சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாகும் என்றும், சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன் பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான பயணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.