சென்னையில் புது பைக்கால் நடந்த விபரீதம் - வாக்கியவருக்கும் விற்ற டீலருக்கும் 97 லட்சம் அபராதம் பதிவு செய்யப்படாத புதிய பைக் ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த கல்லூரி உதவி பேராசிரியரின் குடும்பத்துக்கு 97 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பதிவு கூட பெறாமல் வாகனத்தை பொது சாலையில் இயக்க அனுமதித்த டீலருக்கும் பொறுப்பு இருப்பதாகக் கூறிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாகன உரிமையாளரும், டீலரும் இணைந்து ஒரு மாதத்திற்குள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது