Chennai | ASET | ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை #chennai #ASET #MinisterRajmohan #thanthitv சென்னையில் நடைபெற்ற அசட் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா சென்னை மற்றும் கோவையில் இயங்கி வரும் அசட் கல்வி நிறுவனத்தின் 9வது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், அசட் கல்வி நிறுவன முதன்மை செயல் அதிகாரி முகம்மது ரிஸ்வான், ஆண்டறிக்கை வாசித்ததை தொடர்ந்து, ஏவியேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் கல்வி பயின்ற மாணவர்களுக்குப் அமைச்சர் ராஜ்மோகன் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பட்டிமன்றப் பேச்சாளராக இருந்த தன்னைச் சட்டமன்றத்தில் பேச வைத்தவர் முதலமைச்சர் விஜய் என்று குறிப்பிட்ட அவர், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவதே முதலமைச்சரின் முதன்மையான இலக்கு எனத் தெரிவித்தார். அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.