byelection | maduranthagam சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் மதுராந்தகத்தில் தொடங்கிய தபால் வாக்கு #byelection #maduranthagam #postvote தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு மையத்திற்கு நேரடியாக சென்று வாக்களிக்க சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களின் வாக்கு பதிவு உரிமையை நிலைநாட்டும் வகையில் படிவம் 12D மூலம் தங்களின் வசிப்பிடத்திலிருந்து தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளை பெறுவதற்காக 8-குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்.