சமீபத்திய செய்திகள்

Air Pollution| தமிழகம் முழுக்க அதிகரித்த அபாயம்.. சரியான நேரத்தில் வந்த எச்சரிக்கை

Air Pollution| தமிழகம் முழுக்க அதிகரித்த அபாயம்.. சரியான நேரத்தில் வந்த எச்சரிக்கை

thanthitv

#diwali #airpollution #soundpollution தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காற்று மற்றும் ஒலி மாசு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 343 காற்றுத் தரக் குறியீடு பதிவாகி, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. மேலும் நுங்கம்பாக்கத்தில் 332, சௌகார்பேட்டையில் 311 மற்றும் தி.நகரில் 306 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வின்படி, கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்று மாசு சுமார் 4.50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஒலி மாசைப் பொறுத்தவரை, தீபாவளி நாளன்று பதிவான சராசரி ஒலி அளவு 76.73 டெசிபலாக உயர்ந்து, கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.03 டெசிபல் அதாவது 1.36 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்டாசுகளின் புகையோடு சேர்ந்து காற்றின் வேகம், திசை மற்றும் வளிமண்டல மாற்றங்களும் இந்த காற்று மாசு அதிகரிப்பிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசைக் குறைக்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Gingee Issue| செஞ்சி அருகில் அலறிய சிறுமி.. கடத்த ஆட்டோவில் வந்தவர்கள் யார்?

Chennai | Vikkravandi Tollgate| இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

History Sheeter பூவரசனை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் அதிரடி ACTION

TN Rain | Rainfall | Weatherupdate | ஸ்டார்ட் ஆயிடுச்சு.. 8 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்

Hosur | TN Police | Death | ஓசூர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி