அதிகாரப்பூர்வம்.. ஈரானிடமே டீல் போட்டது இந்தியா.. இத கேட்டா நமக்கே போன உசுரு வந்த மாதிரி இருக்கும்..! ஈரானிடம் இருந்து கச்சா எண்
ணெய் இறக்குமதி செய்வதை உறுதிசெய்தது இந்தியா 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடம் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) இறக்குமதி செய்யப்படுவதை இந்திய பெட்ரோலிய அமைச்சகம் உறுதி செய்துள்ளது. உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து வந்த கச்சா எண்ணெய் கப்பல், பணப் பட்டுவாடா பிரச்சனையால் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக வெளியான தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்தியாவின் எரிசக்தித் தேவை வரும் மாதங்களுக்கு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பணப் பரிமாற்றத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.