Tamilnadu Election 2026

Vijay | TVK | விஜய் 2 தொகுதிகளிலும் வென்றால் `இது’ கட்டாயம் - தேர்தல் ஆணையம் தரப்பு அதிரடி

விஜய் 2 தொகுதிகளிலும் வென்றால் `இது’ கட்டாயம் - தேர்தல் ஆணையம் தரப்பு அதிரடி

thanthitv

விஜய் 2 தொகுதிகளிலும் வென்றால் ஒன்றை ராஜினாமா செய்வது கட்டாயம் சட்டமன்ற தேர்தலில், ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றால், அவற்றில் ஒன்றை கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது எம்பியாக உள்ள விசிக தலைவர் திருமாவளவன், சி.வி.சண்முகம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனிடையே தவெக தலைவர் விஜய், புதிய தமிழகம் கட்சியின் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோர் இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஒரு நபர் இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. ஆக இருக்க முடியாது என்பதால், பதவி ஏற்கும் முன்பே ஒரு தொகுதியைத் தேர்வு செய்து, மற்றொன்றை சபாநாயகரிடம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தான் அவர் எம்.எல்.ஏ. பதவியேற்க முடியும் என்றும், ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Iran Israel War | அமெரிக்காவில் அதிர்ச்சி பதவி நீக்கம்.. ஈரான் போர் நடுவே எதிர்பாரா திருப்பம்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

#BREAKING || Velliangiri Hills | அடுத்த அதிர்ச்சி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி