Tamilnadu Election 2026

Vijay | விஜய்க்கு `அந்த’ VIP-யிடம் இருந்து வந்த எதிர்பாரா அட்டாக்

Vijay | விஜய்க்கு `அந்த’ VIP-யிடம் இருந்து வந்த எதிர்பாரா அட்டாக்

thanthitv

பிரதமர் மோடி, அதிமுக, விஜய்யை விமர்சித்து டி.கே.சிவக்குமார் பிரசாரம் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தில், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பிரதமர் மோடியையும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார். இந்தியா கூட்டணி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் பயன் தரும் வகையில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களே கர்நாடகாவிலும் தாங்கள் செயல்படுத்த உந்துதலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல் அக்கட்சியினரே அவரைக் கழற்றி விட்டுவிட்டதாகக் கிண்டல் செய்தார். மேலும், அதிமுக தனது செல்வாக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இன்னொரு புதிய கட்சிக்காரர் எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் எனப் புறப்பட்டிருக்கிறார்... அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும், நிஜத்தில் நடக்காது" என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

Special Train | ஓட்டு போட ஊருக்கு செல்வோருக்காக சிறப்பு ரயில் இயக்கம் - ரூட், நேரம் அறிவிப்பு

High Court | Vijay | TVK | விஜய்க்கு ஷாக்..! "ரூ.100 கோடி..முறைகேடு" ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

Election Commission | நாளை முடிகிறது.. அமலாகும் புதிய விதிகள்

CM Stalin | திடீரென ஆலோசனையில் இறங்கிய முதல்வர்.. திமுகவினருக்கு முக்கிய அலர்ட்

Selvaperunthagai Congress IT Raid | ட்வீட் போட்ட செல்வப்பெருந்தகை.. IT பரபரப்பு விளக்கம்