Tamilnadu Election 2026

Vijay | Aadhav | கோடீஸ்வர வேட்பாளர்களில் விஜய் 2ம் இடம்.. ஆதவ் 3ம் இடம் - அப்போ ஃபர்ஸ்ட் யாரு?

கோடீஸ்வர வேட்பாளர்களில் விஜய் 2ம் இடம்.. ஆதவ் 3ம் இடம் - அப்போ ஃபர்ஸ்ட் யாரு?

thanthitv

கோடீஸ்வர வேட்பாளர்களில் விஜய் 2ம் இடம்.. ஆதவ் 3ம் இடம் - அப்போ ஃபர்ஸ்ட் யாரு? சர்ப்ரைஸாக வந்த பெண் பெயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவுற்றுள்ள நிலையில், களம் காணும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் 1,048 கோடி ரூபாய் சொத்துகளுடன் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தமிழகத்தின் முதன்மைப் பணக்கார வேட்பாளராக உருவெடுத்துள்ளார். இவரது கணவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் பெயரில் 4,159 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் 2ம் இடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் இவர், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைத் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ. 197.52 கோடி சொத்து உள்ளதாகவும், அதே தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ரூ. 119 கோடியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த்திற்கு ரூ. 95.2 கோடி மதிப்பிலான சொத்துகளும் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ரூ. 68.46 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதேபோல் விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 28.70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சியிடம் 20.67 கோடி ரூபாய் மதிப்பிலும் சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 20.64 கோடி ரூபாய் மதிப்பிலும்,முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 7.64 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3.95 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்