TVK | Nomination | ஊர்வலம் சென்று வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர் -மலர் தூவி வரவேற்ற மக்கள்
தாம்பரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சரத்குமார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, தாம்பரம் சண்முகச் சாலையில் உள்ள தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய அவர், சிலம்பாட்டம் மற்றும் கேரளச் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கட்சித் தலைவர் விஜய்யின் முகமூடியை அணிந்து பங்கேற்றனர்.. இதனைத் தொடர்ந்து, சரத்குமார் தனது மனுவை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம்பரத்தில் தரமான குடிநீர், சாலை வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பிடங்களை அமைப்பதே தனது முதல் இலக்கு என்றும், மக்கள் தமக்கு ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.