Tamilnadu Election 2026

TVK | ``ஒரு அண்ணனா கேக்குறேன்..'' - `விசிலுக்கு’ வாக்கு கேட்ட ஜெகநாத் மிஸ்ரா

``ஒரு அண்ணனா கேக்குறேன்..'' - `விசிலுக்கு’ வாக்கு கேட்ட ஜெகநாத் மிஸ்ரா

thanthitv

சமுதாய தலைவர்களை சந்தித்து ஜெகநாத் மிஸ்ரா வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சிப் பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் உள்ள பல்வேறு சமுதாயத் தலைவர்களை நேரில் சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா, வரும் சட்டமன்றத் தேர்தலில் "விசில்" சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, அந்தந்த சமூக மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய ஜெகநாத் மிஸ்ரா, தான் வெற்றி பெற்றால் கம்பம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் எனவும், மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் முன்னின்று நிறைவேற்றுவேன் எனவும் உறுதி அளித்தார்.

TVK Vijay | Coimbatore | டோல்கேட்டில் சூழ்ந்த தொண்டர்கள் - கையில் தவெக கொடியுடன் மாஸாக விஜய்

🔴LIVE : TVK Vijay | திருப்பூரில் விஜய் என்ட்ரி ஆனதும் தலைகீழான காட்சி

Coimbatore | TVK Vijay | Road show | ஸ்தம்பித்த கோவையில் டெடி பியருடன் கூலாக விஜய் ரோடு ஷோ

Annmalai Speech``கடைசி எச்சரிகைன்னு சொல்லியிருக்காரு’’ - CM ஸ்டாலினுக்கு தன் ஸ்டைலில் அண்ணாமலை பதில்

VCK | Thirumavalavan | TVK Vijay | "விஜய் திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில்.." - திருமாவளவன் தாக்கு