Tamilnadu Election 2026

TVK | நிராகரிக்கப்பட்ட வேட்புமனு.. தவெக எடுத்த அதிரடி முடிவு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு.. தவெக எடுத்த அதிரடி முடிவு

thanthitv

சிதம்பரத்தில் தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட டாக்டர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனையின் போது, டாக்டர் பாரி தனது விண்ணப்பத்தைச் சரியாகப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் கிஷன்குமார் மனுவை நிராகரித்தார். இருப்பினும், மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த பாரியின் தந்தையான நெடுஞ்செழியனின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்செழியன், இது தனது மகனின் வெற்றியைத் தடுக்கச் செய்யப்பட்ட சதி என்றும், தற்போது தான் வேட்பாளராகக் களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்காலிகமாகத் தடையை ஏற்படுத்தினாலும், விஜய்யின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என பாரி தெரிவித்தார்.

#Breaking | TVK Vijay | விஜயை பின்தொடர்ந்த வாகனங்கள் விபத்து.. சரசரவென மோதி விழுந்த பைக்குகள்

TVK Vijay | விஜய் Entry..தலைகீழாக மாறிய தூத்துக்குடி

#BREAKING || Ramadoss | மாம்பழம் வழக்கு - ராமதாஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

Modi | CM Stalin | DMK | ``எங்கள புயலா மாத்தி விட்றாதீங்க..’’ - சீற்றம்கொண்டு CM போட்ட பதிவு

RBI| லோன் எடுத்து EMI கட்டிட்டு இருக்கீங்களா? - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு