Namakkal | L Murugan | BJP | TN Election | "75,000 வாக்குகள்..." - அடித்து சொன்ன எல்.முருகன்
75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - எல்.முருகன் அவிநாசியில் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார் நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்களில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி என்றார். திமுக அரசு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பாஜக உறுப்பினர்கள் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவார்கள் என எல்.முருகன் தெரிவித்தார்.