Tamilnadu Election 2026

Karthi Chidambaram | கவனம் பெறும் கார்த்தி சிதம்பரம் ஆடியோ

கவனம் பெறும் கார்த்தி சிதம்பரம் ஆடியோ

thanthitv

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசிய ஆடியோ பதிவு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.. அந்த பதிவில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் சிலருக்கு மகிழ்ச்சி இருக்கலாம், சிலருக்கு வருத்தம் இருக்கலாம் என்றும், ஆனால், நாம் மொத்தம் 28 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம் என்பதால், அனைவரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நம்மால் முடிந்தவரை தகுதியான நபர்களையே தலைமைக்குப் பரிந்துரை செய்துள்ளோம், எனவே, சூழலைப் புரிந்துகொண்டு தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dharapuram | தாராபுரத்தில் சிக்கிய தங்கம்.. என்னது இத்தனை கோடி மதிப்பா!

Okenakkal | Cauvery River | சட்டென்று மாறிய ஒகேனக்கல்.. திடீரென அதிகரித்த நீர்வரத்து

Demonte Colony 3 | `டிமான்ட்டி காலனி 3' படத்தை வெளியிட தடை

Dhruva Natchathiram | `துருவ நட்சத்திரம்’ வெளியீடு - ஐகோர்ட் கொடுத்த உத்தரவு

BREAKING || அரசு ஊழியர்களை பார்த்ததும் நேராக இறங்கி வந்த CM விஜய்... திடீர் சர்ப்ரைஸ் மொமெண்ட்