Tamilnadu Election 2026

Jayakumar | பிரசாரத்துக்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ் - உடனடியாக தானே இறங்கி ஜெயக்குமார் செய்த செயல்

பிரசாரத்துக்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ் - உடனடியாக தானே இறங்கி ஜெயக்குமார் செய்த செயல்

thanthitv

ஆம்புலன்ஸிற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி, ஆம்புலன்ஸ் செல்ல போக்குவரத்து நெரிசலை சரி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், கல்மண்டபம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டத்திற்கு இடையே, அவசர நோயாளி ஒருவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது. உடனடியாகத் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ஜெயக்குமார், போக்குவரத்தைச் சரிசெய்து ஆம்புலன்ஸ் விரைவாகச் செல்ல வழிவகை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் காசிமேடு பகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

Gold Rate | சடனாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இவ்வளவுதான்

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"