Tamilnadu Election 2026

DMK | வீதி வீதியாக வாக்கு திரட்டிய அமைச்சர் கே.என்.நேரு - தாரை தப்பட்டை முழங்க வரவேற்ற தொண்டர்கள்

வீதி வீதியாக வாக்கு திரட்டிய அமைச்சர் கே.என்.நேரு - தாரை தப்பட்டை முழங்க வரவேற்ற தொண்டர்கள்

thanthitv

வீதி வீதியாக வாக்கு திரட்டிய அமைச்சர் கே.என்.நேரு - தாரை தப்பட்டை முழங்க வரவேற்ற தொண்டர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, உறையூர் பகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெரு, பாளையம் பஜார், பணிக்கன் தெரு, கடைவீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த அவருக்கு, பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது, தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க, சிலம்பாட்டம் மற்றும் குதிரை நடனத்துடன் தொண்டர்கள் அமைச்சரை வரவேற்றனர். குறிப்பாக, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பெண்கள், அமைச்சர் நேருவுக்கு ஆரத்தி எடுத்தும், திலகமிட்டும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்