Tamilnadu Election 2026

DMK | பூங்கொத்து கொடுத்து வரவேற்ற குழந்தை.. நெகிழ்ந்து போய் குழந்தையை தூக்கிய அமைச்சர் கே.என். நேரு

பூங்கொத்து கொடுத்து வரவேற்ற குழந்தை.. நெகிழ்ந்து போய் குழந்தையை தூக்கிய அமைச்சர் கே.என். நேரு

thanthitv

பூங்கொத்து கொடுத்து வரவேற்ற குழந்தை.. நெகிழ்ந்து போய் குழந்தையை தூக்கி காரில் ஏற்றிய அமைச்சர் கே.என். நேரு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 11-வது வார்டுகளில், அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்... உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, காவேரி நகர், வடிவேல் நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம் தெரு, சௌராஷ்டிரா தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார்... பிரச்சாரத்தின் போது, அப்பகுதி மழலைகள் அமைச்சருக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். குழந்தைகளின் அன்பால் நெகிழ்ந்து போன அமைச்சர், அவர்களைத் தனது பிரச்சார வாகனத்திலேயே ஏற்றி அணைத்தபடி, "உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்கு கேட்டது அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது. பொதுமக்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அவரிடம் கொடுத்து மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், சாலைகளில் வண்ணக் கோலமிட்டும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Vijay Speech Cancelled | காரைக்குடியில் விஜய் பேசவில்லை - திரும்பியது பிரசார வாகனம்

TVK Vijay | சைக்கிளை விட்ட வேகத்தில் அப்படியே சரிந்த விஜய்

TVK Campaign Cancel | ஸ்பாட்டில் இருந்து வெளியேறிய விஜய் - ஷாக்கான தொண்டர்கள்

TVK Vijay | சட்டென்று கூட்டத்தில் குதித்த விஜய்.. சைக்கிளில் ஏறியவுடன் ஸ்தம்பித்த இடம்

Karaikudi Vijay Campaign | காரைக்குடிக்கு உள்ளே விஜய் கால்வைத்ததும் காதை கிழித்த அந்த சத்தம்