Tamilnadu Election 2026

BJP Campign | துணிகளை இஸ்திரி செய்து கொண்டே மக்களிடம் வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர் ராமலிங்கம்

துணிகளை இஸ்திரி செய்து கொண்டே மக்களிடம் வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர் ராமலிங்கம்

thanthitv

BJP Campign | துணிகளை இஸ்திரி செய்து கொண்டே மக்களிடம் வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர் ராமலிங்கம்

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான ராமலிங்கம், துணிகளை இஸ்திரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மிஷன் வீதி பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. அப்போது திடீரென ஒரு இஸ்திரி கடைக்குள் நுழைந்த ராமலிங்கம் அங்கிருந்த துணிகளை இஸ்திரி செய்துகொண்டே பொதுமக்களிடம் வாக்கு கேட்டது கவனம் ஈர்த்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே கூடுதல் நிதியைப் பெற்று மாநிலத்தை முன்னேற்ற முடியும் எனத் தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதியை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றத் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் ராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்

TVK | ரிஜெக்ட் செய்யப்பட்டது வேட்புமனு.. பேரதிர்ச்சியில் தவெகவினர்

Congress List | லிஸ்டில் மாணிக்கம் தாகூர்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

DMK | ஸ்டார் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | விஜய் உறுதி.. இரண்டு தொகுதிகளிலும் ஏற்பு