அரியலூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனுக்கு ஆதரவாக, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பொய்யாதநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரியலூருக்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர காரணமான தாமரை ராஜேந்திரனை வெற்றி பெறச் செய்தால், அரியலூருக்கு மீண்டும் அமைச்சர் கிடைப்பார் என்று கூறினார். திமுக ஆட்சியில் மின்கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதனால், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.