Tamilnadu Election 2026

AIADMK | ஒரே நாளில் 25 கிராமங்களில் தீயாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ்

ஒரே நாளில் 25 கிராமங்களில் தீயாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ்

thanthitv

AIADMK | ஒரே நாளில் 25 கிராமங்களில் தீயாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ், ஒரே நாளில் 25 கிராமங்களுக்குச் சென்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். சிறுமுகை அடுத்த மூடுதுறை ஊராட்சியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், இரவு 10 மணி வரை இடைவிடாது வாக்குச் சேகரித்தார். அப்போது மக்களிடையே பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைந்ததும் நிலப்பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டு, வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார். மேலும் இரட்டை இலை சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகள் அளித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பிரசாரத்தின் போது அதிமுக கூட்டணிக் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி

Election Commission | TN Election 2026 | தமிழகத்தில் கண்டறிந்தது தேர்தல் ஆணையம்

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்