Tamilnadu Election 2026

ADMK | தன் கையால் தாலி எடுத்து கொடுத்துவிட்டு நாமினேஷன் செய்த அதிமுக வேட்பாளர்

தன் கையால் தாலி எடுத்து கொடுத்துவிட்டு நாமினேஷன் செய்த அதிமுக வேட்பாளர்

Web Team - Thanthi TV

அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் வேட்புமனுத்தாக்கல் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ எஸ். பவுன்ராஜ், ஒரு நெகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஒழுகைமங்கலம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்களுக்குத் தனது கையால் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின்னர் அதே ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், கட்சி நிர்வாகிகளுடன் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் தனது வேட்புமனுவை முறையாக வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்