'சுவிதா' இணையதளம் மூலம் 737 விண்ணப்பங்களுக்கு தீர்வு சுவிதா இணையதளம் மூலம் இதுவரை 2,443 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 737 விண்ணப்பங்கள் காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது... இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கிறது. வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான நேர ஒதுக்கீடுகளை முன்பதிவு செய்யவும் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் போன்ற அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் வசதியளிக்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் செயல்முறையை முடித்த பிறகு, விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் மூலம் இதுவரை 2,443 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 737 விண்ணப்பங்கள் காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.