ஒலிம்பிக்ஸ்-2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இந்திய தேசியக்கொடியை ஏந்திச் செல்லவுள்ள மனு பாக்கர்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள மனுபாக்கர், நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில், இந்தியாவின் தேசியக்கொடியை மகளிர் சார்பாக மனுபாக்கர் கையில் ஏந்திச் செல்லவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஆடவர் சார்பில் தேசியக்கொடியை ஏந்தும் வீரர் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்