ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | அமெரிக்காவையே திரும்பிப் பார்க்க வைத்த ஜாம்நகர் அதிசயம்.அமெரிக்காவின் திடீர் U-Turn

Special Report | அமெரிக்காவையே திரும்பிப் பார்க்க வைத்த ஜாம்நகர் அதிசயம்.அமெரிக்காவின் திடீர் U-Turn

thanthitv

Special Report | அமெரிக்காவையே திரும்பிப் பார்க்க வைத்த ஜாம்நகர் அதிசயம்.. பின்னணி என்ன? தொடர் அழுத்தம் கொடுத்த அமெரிக்காவின் திடீர் U-Turn #america #gujarat #jamnagar #india #trump #pmmodi #thanthitvspecialreport #thanthitv உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, இந்தியாவை எண்ணெய் சுத்திகரிப்பதில் வல்லரசு என்று புகழாரம் சூட்டியிருக்கு. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்த அமெரிக்கா இப்போது, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியாவோட உதவியை நாடியிருக்கு. அதன் பின்னணி என்ன? அமெரிக்கா பெரிதும் எதிர்பார்ப்போடு பார்க்கும் ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் உலகின் பார்வையை தன்பக்கம் ஈர்த்திருப்பது ஏன்? என்பதை விரிவாக பார்க்கலாம். இந்தியா–அமெரிக்க இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? என்ற கேள்வி பதில் இல்லாமல் தொடருது. வர்த்தக ஒப்பந்தம் இழுபறி விஷயத்துல ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதையே முக்கிய காரணமாக சொல்லிட்டு வந்திச்சு. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க இந்தியாவுக்கு அமெரிக்கா வரி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இந்தியாவுக்கு 100% வரி என்றெல்லாம் எச்சரிக்கை டிரம்ப் விடுத்தாரு. ஆனா, சமீபத்துல ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வரி மற்றும் தடைகளுக்கு டிரம்ப் விலக்கு அளித்திருக்காரு. அது, இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முக்கிய பிரச்சினையாகவே இருக்கு. இந்த சூழல்லதான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு வந்திருக்காரு. மும்பையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர, ரூபியோ சந்தித்து பேசினாரு. அப்போது, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்த எட்டியிருப்பதாக சொன்னாரு. இந்தியாவை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் வல்லரசு என்றார் ரூபியோ. மும்பை பயணத்தை முடித்ததுமே மார்க் ரூபியோ அவருடைய பயணத்துல மிக முக்கிய நிகழ்வான குஜராத் மாநிலம் ஜாம்நகர் பயணத்த தொடங்கினாரு.

Breaking | Gingee Girl Missing| கடந்த 10 நாட்களாக மாயமான சிறுமி | மாயமாகும் முன் எடுத்த கடைசி வீடியோ

Chennai | Metro Rail | சென்னை மக்களே! - மெட்ரோ நேரத்தில் மாற்றம்

Delhi | CJP Saurav Das | CJP முக்கிய நிர்வாகி சௌரவ் தாஸ் விடுதலை..

CM Vijay | Thuli | தமிழகத்தில் வெளுக்கும் மழை | சரியான நேரத்தில் CM விஜய் இறக்கிய திட்டம்

CM Vijay | மாஸாக வந்து இறங்கிய CM விஜய்.. அமைச்சர்கள் சேர்ந்து செய்த சம்பவம்