ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report நியூசி.யில் PM மோடி போட்ட ஸ்கெட்ச்..சீனாவின் ஏவுகணை சோதனை குறித்து நடந்த மீட்டிங்

Special Report நியூசி.யில் PM மோடி போட்ட ஸ்கெட்ச்..சீனாவின் ஏவுகணை சோதனை குறித்து நடந்த மீட்டிங்

thanthitv

நியூசி.யில் பிரதமர் மோடி போட்ட ஸ்கெட்ச்...சீனாவின் ஏவுகணை சோதனை குறித்து நடந்த மீட்டிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், அதிகாரப்பூர்வ பயணமா நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு பயணிச்சாரு. இந்தியா–நியூசிலாந்து உறவின் வரலாற்றில் இந்தப் பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுது. அதுலயும் குறிப்பா பிரதமர் நரேந்திர மோதியின் இந்தப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுது. காரணம், இந்திய பிரதமர் ஒருவர் அதிகாரப்பூர்வ இருதரப்பு பயணமா நியூசிலாந்துக்கு சென்றிருப்பது சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதுக்கு முன்னாடி, 1986-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு, இரு நாடுகளின் தலைவர்கள் பல்வேறு சர்வதேச மாநாடுகள்ள சந்தித்திருந்தாலும், இந்திய பிரதமரின் தனிப்பட்ட இருதரப்பு பயணம் நடைபெறல. இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்து சென்றிருப்பது, இரு நாடுகளும் தங்களது உறவுக்கு புதிய முக்கியத்துவம் கொடுத்து வருவத காட்டுது. அதுனால தான் இது ஒரு வழக்கமான வெளிநாட்டு பயணமா மட்டும் பார்க்கப்படல. மாறாக, இந்தியா–நியூசிலாந்து உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பயணமா சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுராங்க.

Vietnam Tragedy | உயர்ந்த பலி எண்ணிக்கை | தமிழ்நாட்டையே கண்ணீரில் மூழ்கடித்த வியட்நாம் கோரம்

🔴LIVE : Vietnam Tragedy | வியட்நாமில் பலியான தமிழர்கள் யார் யார்? வெளியான விவரங்கள்

BREAKING || "ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்" - சென்னை மக்கள் கவனத்திற்கு

CM Vijay | Vietnam | வியட்நாம் கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் | ஆக்‌ஷனில் இறங்கிய CM விஜய்

Vietnam | boat |வியட்நாம் படகு விபத்தில் பழனியை சேர்ந்தவர் பலி - நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்