நாடாளுமன்ற தேர்தல் 2024

பாஜகவுக்கு ஈட்டியை இறக்கிய பாமக.. குருஷேத்ர வியூகம்.. மவுனமாக சாதித்த ஈபிஎஸ்

தந்தி டிவி

#edappadipalanisamy #anbumaniramadoss #bjpvsadmk #annamalai #modi

மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸுடன், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்...

மக்களவவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக மற்றும் பாமக கட்சிகள் தங்கள் கூட்டணி குறித்த முடிவில் இறுதியாகாத சூழல் நிலவியது.

நேற்றைய தினம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இந்நிலையில், இன்றைய தினம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, பாமகவினர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளதாகவும், அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதியாகக் கூடும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்