நாடாளுமன்ற தேர்தல் 2024

முதல்முறை வாக்காளர்களுக்கு பணம் வழங்க அண்ணாமலை திட்டமா? - பரபரப்பு புகார்

தந்தி டிவி

கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி விளையாட்டு போட்டிகள் நடத்தி பணம் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள‌ அந்தப் புகாரில், கோவையில், முதல்முறை வாக்காளர்களுக்கு ஏப்ரல் 6,7 ஆகிய தேதிகளில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை நடத்தி, பணம் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக, தேர்தல் விதிகளை மீறி, பாஜகவின் கட்சி சின்னம் மற்றும் பாஜக தலைவர்களின் புகைப்படங்களுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், போட்டிகள் நடத்தி பணம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதை தடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்...

BREAKING || "தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம்..." - அதிரடி காட்டப்போகும் IT

TVK Vijay | TN Election 2026 | நேற்று முடிந்த தேர்தல் - இன்று விஜயின் `முதல் ரியாக்‌ஷன்’

TN Election 2026 | பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல்.. சரிபார்க்கும் வேலை ஆரம்பம்

Selvaperunthagai | வருமான வரித்துறை ரெய்டு விவகாரம்.. வீடியோவை காட்டிய செல்வப்பெருந்தகை

PM Modi | பிரதமர் கையில் கேமரா.. கொல்கத்தாவில் படகு சவாரி