நாடாளுமன்ற தேர்தல் 2024

"இந்தியா ஏன் இந்து தேசம் என அறிவிக்கப்படவில்லை?" - வெடிக்கும் புது சர்ச்சை

தந்தி டிவி

மக்களவை தேர்தலில் பாஜக வேட்பளராக போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத், இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் 2014 தான் கிடைத்தது என பேசியுள்ளார்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டத்தில் பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பின்னர், இந்தியா மட்டும் ஏன் இந்து தேசம் என அறிவிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், ஆங்கிலேயர்கள், முகலாயர்களின் மோசமான ஆட்சியை பார்த்த நம் முன்னோர்கள், பின்னர் காங்கிரசின் தவறான ஆட்சியை பார்த்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 2014ல்தான் சனாதன சுதந்திரம், மத சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், இந்து தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை கிடைத்தாகவும், அதுதான் உண்மையான சுதந்திரம் என்றும் கங்கனா ரனாவத் பேசியுள்ளார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்