நாடாளுமன்ற தேர்தல் 2024

செண்டை மேளம் முழங்க வீதி வீதியாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

தந்தி டிவி

#Trichy | #AIADMK | #electioncampaign

செண்டை மேளம் முழங்க வீதி வீதியாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, செண்டை மேளம் முழங்க வீதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று வாக்கு சேகரிப்பதற்கு முன்னதாக, திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தொண்டர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செண்டை மேளம் முழங்க பெண்களின் நடனத்துடன், வேட்பாளர் கருப்பையா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவரை பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்று சால்வை அணிவித்தனர். செண்டை மேளத்துடன் விதவிதமான அலங்காரத்துடன் பெண்கள் நடனமாடி சென்றது அனைவரையும் கவர்ந்தது.

Manamadurai | Death | மானாமதுரை இளைஞர் மரண வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

DMK | AIADMK | TN Elections | "அனைவரும் போட்டியின்றி தேர்வு.." - குஷியில் திமுக, அதிமுக

MP Election Victory | DMK | ADMK | திமுக அதிமுகவுக்கு வந்த வெற்றி செய்தி

TVK Vijay | CBI | டெல்லியில் இருந்து வந்த அழைப்பு - தன் முடிவை சொன்னார் விஜய்

TVK Vijay | "விஜய் NDA-வில் சேர்ந்தால் தான் சாத்தியம்" - பகீர் கிளப்பிய கோலாகல ஸ்ரீநிவாஸ்