பெர்லின் திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகை மிஷெல் யோவுக்கு வாழ்நாள் சாதனைக்கான கௌரவ கோல்டன் பியர் விருது வழங்கப்பட்டது. ஹாங்காங் அதிரடி படங்களால் புகழ்பெற்ற யோ, இந்த விருதைப் பெறும் முதல் ஆசிய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு "Everything Everywhere All at Once" ” படத்திற்காக ஆஸ்கார் வென்றார். விருதுடன் மேடையில் பேசிய் அவர், புதிய குரல்கள் முக்கியம் என்றும், இளம் கலைஞர்கள் தங்கள் தனித்துவத்தை நம்ப வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.