உலகம்

World பள்ளியில் புகுந்து துப்பாக்கிச்சூடு... ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தைகள்..அதிர்ச்சியில் உலகம்

தந்தி டிவி

பள்ளியில் புகுந்து கொடூர துப்பாக்கிச்சூடு... இரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தைகள்... 21 வயது இளைஞரின் வெறிச்செயலால் அதிர்ச்சியில் உலகம்

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாக்கு நேற்றைய தினம் ஒரு வழக்கமான நாளா இருந்திருக்காது, காரணம் போர் காலங்களுக்கு அப்பரமா மிக கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கு, அதுவும் ஒரு பள்ளிகூடத்துல.

இந்த சம்பவம் ஆஸ்திரியாவோட எந்த பகுதியில நடந்தது, இதோட முழு பின்னணி என்னங்கரத பத்தி பார்ப்போம்.

தெற்கு ஆஸ்திரியாவோட மலைப்பாங்கான காடுகள்ளாம் நிறைஞ்ச மாகாணம் தான் ஸ்டைரியா. இந்த மாகாணத்தோட தலைநகரம் தான் கிராஸ். வியன்னால இருந்து ஒரு 200கிமீ தொலைவுல இருக்கர இடம் தான் இந்த கிராஸ். 3 லட்சத்துக்கும் அதிமகான மக்கள் தொகைய கொண்ட இந்த நகரம் தான் வியன்னாக்கு அப்பரமா அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாவும் சொல்லப்படுது. பள்ளி, கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களுக்கு பேர்போன ஒரு இடமாவும் திகழுது இந்த கிராஸ் நகரம்.

இங்க இருக்ககூடிய ஒரு மேல்நிலைபள்ளியில தான் அந்த கொடூர தாக்குதல் நடந்துருக்கு. காலைல சுமார் 10 மணி அளவுல பள்ளி வளாகத்துல துப்பாக்கி சத்தம் கேட்ட நிலையில உடனடியா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கு.

இதுக்கிடையில பள்ளி வளாகத்துல இருந்த மாணவர்கள், ஆசிரியகள் பிற பணியாளர்கள் எல்லாம் உடனடியா பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்படராங்க. சம்பவ இடத்துக்கு 300க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்படராங்க.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துல பலியானோர் எண்ணிக்கை 11 ஆக இருக்கரதா தகவல்கள் தெர்விக்கிது. இறந்தவங்கள்ள 6 பேர் பெண்கள்,3 ஆண்கள்னு ஆஸ்திரிய அரசு தரப்புல சொல்லப்படுது.

12 பேர் காயம்டைஞ்சு மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருக்காங்க. இறந்தவங்கள்ள மாணவர்களோட எண்ணிக்கையே அதிகம்னும் சொல்லப்படுது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்ககூடும்னும் அஞ்சப்படுது.

இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டுல ஈடுபட்ட நபர் அந்த பள்ளியோட முன்னாள் மாணவர்னு விசாரனையில தெரியவருது. அவருக்கு சுமார் 21 வயசு இருக்கும்னும் அவர் கிட்ட இருந்த கைதுப்பாக்கிய வெச்சு இரண்டு வகுப்பறைகள்ள இருந்த மாணவர்கள் மேல துப்பாக்கிச்சூடு நடத்துனதாவும் அதுல ஒன்னு ஒரு காலத்துல அவரோட வகுப்பறையா இருந்ததாவும் விசாரனையில தகவல் வெளியாகிருக்கு.

அதுமட்டும் இல்லாம இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்த தொடர்ந்து அந்த நபரும் பள்ளில இருக்கர கழிப்பறைக்கு போயி தன்னை தானே சுட்டு தற்கொலை செஞ்சுகிட்டதவும் ஆஸ்திரிய ஊடகங்கள் தரப்புல தகவல் வெளியாகிருக்கு. இந்த தாக்குதல் சம்பவத்தோட உண்மையான நோக்கம் என்னங்கரத பத்துன விசாரணை இன்னும் நடந்துட்டு வர்ரதா அதிகாரிகள் தரப்புல சொல்லப்பட்டிருக்கு.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நபர் வெச்சிருந்த துப்பாக்கி ஆவணங்களோட இருந்ததா சொல்லக்கூடிய போலீசார், துப்பாக்கி வெச்சிருக்கரதுகரது ஆஸ்திரியாவ பொறுத்தவரைக்கும் பொதுவான ஒரு விஷயம்னும் 100த்துல 30 பேர் கிட்ட துப்பாக்கி இருப்பதாவும் சொல்லப்படுது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்