உலகம்

"அடுத்த பேரழிவை சந்திக்கும் முன்பாகவே தயாராகுங்கள்" - உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள்

அடுத்த சுகாதார பேரழிவை சந்திக்க உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதானம் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

அடுத்த சுகாதார பேரழிவை சந்திக்க உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதானம் தெரிவித்து உள்ளார். ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கை சீற்றங்களும், தொற்று மற்றும் கொள்ளை நோய்கள் தாக்குவதும் வழக்கமானது தான் என தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கொள்ள உலக நாடுகள் சுகாதார துறையில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனோ தொற்று உலகின் கடைசி சுகாதார பேரழிவு அல்ல என வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ள டெட்ரோஸ் ஆதானம் கெப்ரூசஸ், அடுத்த பேரழிவு வருவதற்கு முன்பு சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த உலக நாடுகள் முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்