#india | #america "இந்தியாவோடு..." அமெரிக்காவின் மெகா அறிவிப்பு இந்தியா, அமெரிக்கா இடையே ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் ஜேக்கோப் ஹெல்பெர்க் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த இலக்கை நிர்ணயித்து அதை செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும், நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஜேக்கோப் ஹெல்பெர்க் தெரிவித்தார்.