#trump #netanyahu
இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தனது "முழுமையான ஆதரவை" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற அக்டோபர் 27ம் தேதி இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நெதன்யாஹுவை ஒரு வீரமிக்க பிரதமர் என்றும் அமைதிக்கான வலுவான பங்குதாரர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், நெதன்யாஹுவைத் தவிர வேறு யாராவது இஸ்ரேலின் தலைவராக வந்தால் ஈரானை எதிர்கொள்ளும் பொறுப்பை அமெரிக்காவே தனியாகச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில் , டிரம்பின் இந்த முழு ஆதரவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நன்றி தெரிவித்துள்ளார்