உலகம்

6 மாடிகள் 132 ரூம்கள் 412 கதவுகள்... சுரங்கம்! பலரும் அறியா வெள்ளை மாளிகை ரகசியம்

தந்தி டிவி

வெள்ளை மாளிகை.. உலக வல்லரசின் அதிகாரம் குவிந்திருக்கும் இடம். எண் 1600, பென்சில்வேனியா அவென்யூ, வாஷிங்டன் டிசி இதுதான் வெள்ளை மாளிகை முகவரி... இப்போது அதிபர் டிரம்ப் முகவரி.

18 ஏக்கர் பரப்பளவில் பளபளக்கும் வெள்ளை மாளிகை, வரலாற்றில் அடிமைகளை கொண்டு உருவாக்கப்பட்ட மாளிகை...

1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராக பதவியேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington), பொட்டாமக் Potomac நதிக்கரையில் அழகிய அதிபர் மாளிகையை கட்ட திட்டமிட்டார்.

அவரது ஆசையை நிறைவேற்ற அயர்லாந்து கட்டிடக்கலை வல்லுநர் ஜேம்ஸ் ஹோபன் (James Hoban) வெள்ளை மாளிகையை வடிவமைத்தார்.

1792-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. கறுப்பின அமெரிக்கர்களை கொண்டு கட்டப்பட்ட வெள்ளை மாளிகை வானுயர வளர்ந்தது.

ஆனால்... மாளிகையை கட்டிய ஜார்ஜ் வாஷிங்டன்னால் அதில் குடியேற முடியவில்லை. ஆம் கட்டுமான பணிகள் முடியும் முன்பாகவே அவர் இறந்துவிட்டார். அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஜான் ஆடம்ஸ்தான் (John adams) மாளிகையில் வசித்த முதல் அமெரிக்க அதிபர்.

1814-ல் ஆங்கிலேய படைகளால் எரிக்கப்பட்ட வெள்ளை மாளிகை

என்னதான் வல்லரசின் அதிகார மாளிகையாக இருந்தாலும் வரலாற்றில் தாக்குதலையும் எதிர்க்கொண்டிருக்கிறது வெள்ளை மாளிகை...

1814 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளால் வெள்ளை மாளிகை எரிக்கப்பட்டது. அப்போது 1817-ல் மீண்டும் மாளிகை கட்டப்பட்டதாக வெள்ளை மாளிகை குறிப்புகள் காட்டுகிறது. 1902, 1952-ல் மாளிகை மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும், வெளிப்புற கல் சுவர் இரு நூற்றாண்டை தாண்டி இன்றும் நிலைத்து நிற்கிறது.

வெள்ளை மாளிகை என பெயர் சூட்டப்பட்டது எப்போது?

மாளிகை வெள்ளை மாளிகை என பெயர் பெற்ற வரலாறும் சுவாரஸ்யமானது. ஆம்... 1798-ல் மாளிகை கட்டுமானத்தின் போது மணற்கற்களைப் பாதுகாக்க சுண்ணாம்பு அடிக்கப்பட்டது. நாளடைவில் பருவநிலையை எதிர்க்கொள்ளும் வகையில் வெள்ளை பெயின்ட் பயன்படுத்தப்பட்டது. மாளிகையின் நிறத்தை கொண்டு மக்கள் வெள்ளை மாளிகை என்று அழைக்க, 1901-ல் அப்போதைய அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) மாளிகைக்கு அதே பெயரையே சூட்டிவிட்டார்.

மாளிகையில் இருக்கும் ஓவல் அலுவலகம் அதிபரின் முதன்மை அலுவலகமாக இருக்கிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்