உலகம்

3 வது அலை - குழந்தைகளை பாதிக்குமா ?

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என புதிய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

3 வது அலை - குழந்தைகளை பாதிக்குமா ?

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என புதிய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 10 வயதிற்கும் குறைவான 2,500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து லான்செட் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய் அறிகுறி இல்லாமல் இருப்பதாகவும், ஒருவேளை அறிகுறி தென்பட்டாலும் வயிற்று வலி, வாந்தி போன்ற லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா பாதித்த குழந்தைகளில் 2 புள்ளி 4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 40 சதவீத குழந்தைகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாத குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்றாம் அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என எங்கும் நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளை திறப்பதில் அரசுகள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும் எனவும், முடிந்தளவு காணொலி வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ