Ukraine | Russia | மீண்டும் போர் பதற்றம்.. உக்கிரமான ரஷ்யா - உக்ரைன் மோதல் #ukraine #ukrainewar #russia #thanthitv உக்ரைன் போர்க்களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. உக்ரைன் பாதுகாப்பு கோட்டிற்குள் மேலும் முன்னேறியதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது. உக்ரைனின் 153 பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 139 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், டோனெஸ்க் மற்றும் சபோரிஜ்ஜியா பகுதிகளில் 2 பகுதிகளை கைப்பற்றியதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 1,355 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. மேலும், ரஷ்ய படைகளின் கட்டளை மையங்கள் உள்ளிட்ட ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news