உலகம்

Trump | அமெரிக்காவிலும் இடைத்தேர்தல்.. அதிபர் டிரம்புக்கு ஆசிட் டெஸ்ட்..தோத்தா கதையே கந்தல்

அமெரிக்காவிலும் இடைத்தேர்தல்.. அதிபர் டிரம்புக்கு ஆசிட் டெஸ்ட்..தோத்தா கதையே கந்தல்

thanthitv

அமெரிக்காவிலும் இடைத்தேர்தல்.. அதிபர் டிரம்புக்கு ஆசிட் டெஸ்ட்..தோத்தா கதையே கந்தல் #trump #usbyelection அமெரிக்க இடைத்தேர்தல் - நாடாளுமன்றத்தை கைப்பற்ற கடும் போட்டி ​அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 தொகுதிகளுக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையே 50 தொகுதிகளில் மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.

தற்போது குடியரசுக் கட்சியின் வசம் உள்ள பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்ற ஜனநாயகக் கட்சிக்குக் கூடுதல் 3 இடங்கள் தேவைப்படுகின்றன. அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் தொகுதி மறுவரையறை, பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் குடியுரிமை விவகாரங்கள் ஆகியவை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முதன்மைப் புள்ளிகளாக உருவெடுத்துள்ளன. நவம்பர் மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போட்டிக் களத்தில் உள்ள இந்த 50 தொகுதிகளின் முடிவுகளே அமெரிக்க நாடாளுமன்றத்தை ஆளப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கவுள்ளன. அமெரிக்க அதிபர் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

#america #trump #thanthitv

Nellai ``இது என்னங்க இது கொடுமை’’ - இரவோடு இரவாக நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி

Census | CM Vijay | சென்சஸ்ஸில் சாதி விவரம்.. காத்திருக்கும் பிரேக்கிங்

Train | Ticket Booking | தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங்கில் சிக்கல்.. 3-வது நாளாக பயணிகள் ஏமாற்றம்

Omni Bus | ஆம்னி பேருந்துகள் மீது வந்த புகார்.. போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

TN Byelection 2026| அமலான ஸ்ட்ரிக்ட் விதிகள்.. பறிமுதல் செய்யப்படலாம்.. பணம் பத்திரம்.. மக்களே உஷார்