அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானின், உற்பத்தி, சுரங்கம், ஜவுளி துறைகள் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.