ஈரான் போர் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ஜெர்மனியிலிருந்து 5ஆயிரம் அமெரிக்கப் படைக வீரர்களைளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடனான முரண்பாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படைகள் திரும்பப் பெறும் நடவடிக்கை 6 முதல் 12 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று பென்டகனின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், தெரிவித்துள்ளார்.