உலகம்

விண்வெளிக்கு சுற்றுலா; அமேசான் திட்டம் - விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெப் பெசொஸ் -

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த திடீர் பயணத்தின் பின்னணி என்ன...? தற்போது பார்க்கலாம்...

தந்தி டிவி

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த திடீர் பயணத்தின் பின்னணி என்ன...? தற்போது பார்க்கலாம்...

அமேசான் நிறுவனத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்த ஜெப் பெசோஸ் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

இவரின் புளு ஆரிஜின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம், விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

நியு ஷெப்பர்ட் என்ற ராக்கெட் உடன் கூடிய விண்கலத்தை உருவாக்கி, சோதனை செய்துள்ளது.

இதுவரை மனிதர்கள் இல்லாமல், தானியங்கி முறையில் மூலம், புளு ஆரிஜின் விண்கலம் 15 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 20ஆம் தேதி, முதன் முறையாக இந்த விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் ஜெப் பெசோஸ் தனது சகோதர் மார்க் பெசோஸுசன் பங்கு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

விண்வெளி பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளை தேர்வு செய்ய இரண்டு சுற்றுகள் ஏலம் நடத்தப்பட்டது.

இரண்டாவது சுற்றின் இறுதியில் அதிகபட்சமாக ஒருவர் 20.3 கோடி ரூபாய் ஏலம் கேட்டுள்ளதாக புளூ ஆரிஜின் நிறுவனம் கூறியுள்ளது.

பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு தானியங்கி முறையில் பறக்க உள்ள இந்த விண்கலத்தில் ஆறு பேர் வரை பயணிக்கலாம்.

விண்வெளியில் எடையற்ற நிலையை சில நிமிடங்கள் அனுபவத்த பின், இந்த விண்கலத்தின் ஆறு ஜன்னல்கள் மூலம் உருண்டை வடிவமான பூமியை கண்டு ரசிக்க முடியும்.

பூமிக்கு திரும்பும் இந்த விண்கலம், மிக மெதுவாக, பாராசூட்டுகள் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க், ரிச்சர் பிரான்சன் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள், இந்தத் துறையில் முன்னோடிகளாக, பல ஆயிரம் கோடிகள முதலீடு செய்திருந்தும், இதுவரை அவர்கள் யாரும் விண்வெளி பயணம் மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு