உலகம்

போர் பயிற்சியில் விபரீதம்...பலியான ராணுவ வீரர்கள்

தந்தி டிவி

போர் பயிற்சியில் விபரீதம்...

பலியான ராணுவ வீரர்கள்

விமான விபத்தில் 3 உக்ரைனிய ராணுவ விமானிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கீவுக்கு மேற்கே 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சைட்டோமிர் நகருக்கு அருகே, பயிற்சியின் போது 2 L-39 ரக போர் பயிற்சி விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில், 3 உக்ரைனிய ராணுவ விமானிகள் பலியானதாக அறிக்கை வெளியிட்டுள்ள உக்ரைன் விமானப்படை, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் ஒருவர் மிகவும் பிரபலமான "ஜூஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட விமானி ஆவார். மிக்-29 விமானியான ஜூஸ், போரின் துவக்கத்தில் மத்திய மற்றும் வடக்கு உக்ரைனைப் பாதுகாத்த Ghost Of Kyiv யூனிட்டில் முக்கிய பங்காற்றியவர்... இவருக்கு மதுப்பழக்கம் இல்லை எனவும், மதுவுக்கு பதிலாக எப்போதும் பழச்சாறு மட்டுமே கேட்பதால், "ஜூஸ்" என்ற புனைப்பெயர் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி