இலங்கையின் மட்டக்களப்பு நகரை அடுத்த ஆரையம்பதி கிராமத்தில், குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்கள் 3 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, தர்சன், திவாகரன், யதுர்சன் ஆகிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு இளைஞர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் மூன்று இளைஞர்கள் இறந்த சம்பவம், ஆரையம்பதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.