இஸ்லாமிய நாடுகளுக்கு மொஜ்தபா காமேனி சொன்ன சேதி ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி, பாரசீக புத்தாண்டான நவ்ரூஸ் உரையின்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு சகோதர நாடுகள் தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக ஈரான் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முஸ்லிம் நாடுகளுக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக எச்சரித்த மொஜ்தபா காமேனி, துருக்கி மற்றும் ஓமன் மீது நடந்த தாக்குதல்கள் ஈரான் மேற்கொண்டவை அல்ல, அவை “போலி நடவடிக்கைகள் என குற்றம்சாட்டினார். ஈரான் எந்த முஸ்லிம் நாட்டுடனும் மோதலை விரும்பவில்லை என்றும், தற்போதைய பதற்றங்களுக்கு வஞ்சகம் நிறைந்த எதிரிகள் தான் காரணம் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியான், கூறினார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை, அது மதரீதியாகத் தடை செய்யப்பட்டதாகவும் மசூத் தெரிவித்தார்...