பிரேசிலில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் புகுந்து இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக பூர்வகுடி மக்கள் விளக்கமளித்துள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே பருவநிலை மாநாட்டில் புகுந்ததாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக பாரம்பரிய முறையில் நடனமாடி, காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை அவர்கள் பதிவு செய்தனர்.