உலகம்

Spain Flood | புயல் எதிரொலி - கொட்டித் தீர்க்கும் கனமழை...ஊரையே காலி செய்து வெளியேறும் மக்கள்

கனமழை...ஊரையே காலி செய்து வெளியேறும் மக்கள்

thanthitv

#spainflood | #spain புயல் எதிரொலி - கொட்டித் தீர்க்கும் கனமழை...ஊரையே காலி செய்து வெளியேறும் மக்கள் தொடர் கனமழையால் தெற்கு ஸ்பெயினில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். லியோனார்டோ புயல் காரணமாக, பெனஹோஹான் நகரில் மேலும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். கனமழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மலாகா மாகாணத்தில் நதியில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் ஆயிரம் மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அண்டலூசியா பகுதியில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு